சென்னை பெண் கொலையில் 15 வயது சிறுவன் கைது!

ஆகஸ்ட் 05, 2018 616

சென்னை (05 ஆக 2018): சென்னையில் பெண் ஒருவர் கொலை தொடர்பாக 15 வயது சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளார்.

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச்சேர்ந்தவர் சங்கரசுப்பு (வயது44). இவர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்செல்வி (35), இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2-ம் தேதி மதியம் தமிழ்செல்வி வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

கழுத்து நெறிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். கேமரா பதிவின் படி விசாரணை நடத்தி தமிழ்செல்வியின் உறவுக்கார 15 சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...