கருணாநிதிக்கு மீண்டும் தீவிர சிகிச்சை!

August 05, 2018

சென்னை (05 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதிக்கு மஞ்சள் காமாலை தாக்கியிருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் கீழ் உள்ளார். தொடர்ந்து மருத்துவ குழுவும் அவரை கண்காணித்தபடியே உள்ளனர். இதனால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அளிக்கப்படும் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக் கொள்வதாகவும் மருத்துவர்கள் அவ்வப்போது தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று அவருக்கு மஞ்சள் காமாலை தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகவும் கூறப் படுகிறது.

இதற்கிடையே கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் இன்று சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!