அமெரிக்காவில் விஜய்காந்த் எப்படி இருக்கிறார் தெரியுமா?

ஆகஸ்ட் 05, 2018 702

நியூயார்க் (05 ஆக 2018): சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜய்காந்த் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் காந்த் தொண்டை வலி காரணமாக பொது இடங்களில் அதிகமாக பேசாமல் தவிர்த்து வந்தார். அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த 7-ஆம் தேதி மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முகபாண்டியனுடன் அமெரிக்கா புறப்பட்டார். அங்கு இருந்தபடியே கருணாநிதியின் உடல்நிலையை கண்டு வருந்தினார். பின்னர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும் ட்விட்டரிலும் ஆளூங் கட்சிக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் அமெரிக்காவில் புதுபொலிவுடன் உள்ள புகைப்படங்களை டுவிட்டரில் கேப்டன் வெளியிட்டுள்ளார். அதில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் இன்று என்று தலைப்பிட்டு படங்களை வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...