அலைக்கழிக்கும் ஏஜெண்டுகள் - ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கு எச்சரிக்கை!

ஆகஸ்ட் 06, 2018 688

ஹஜ் உம்ரா யாத்ரீகர்களை சில தனியார் ஏஜெண்டுகள் அளவுக்கு அதிகமாக அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஹஜ் , உம்ராவுக்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்ய செல்லும் யாத்ரீகர்கள் குலுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப் படுவதால் சில வருடங்களுக்கு அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தனியார் ஏஜெண்டுகளை நாடுகின்றனர்.

ஆனால் அவர்களின் உண்மை தன்மை சரிவர உணராமல் அல்லது தீர விசாரிக்காமல் பணத்தை கட்டி மக்காவுக்கு பயணம் மேற்கொண்டு விடுகின்றனர். ஆனால் அங்கு பெரும்பாலான எஜெண்டுகள் யாத்ரீகர்களை அலைக்கழிப்பதை அங்குள்ளவர்களால் கண்கூடாக காண முடிகின்றது.

இப்படித்தான் கடந்த ஜூன் மாதம் ஒரு தனியார் நிறுவனம் மூலம் உம்ரா வந்த யாத்ரீகர்கள் கடுமையாக அலைக்கழிக்கப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கும், மக்காவில் உள்ள ஹோட்டலுக்கும் பண பரிவர்த்தனை காரணமாக உம்ரா யாத்ரீகர்களின் பாஸ்போர்ட்டை கையில் வைத்துக் கொண்டு ஹோட்டல் நிர்வாகம் திருப்பி கொடுக்க மறுத்துள்ளது. இதில் ஜித்தா இந்தியன் சோஷியல் ஃபாரம் தலையிட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டதன் விளைவாக ஹோட்டல் நிர்வாகத்திடமிருந்து பாஸ்போர்ட் பயணிகளிடம் அன்றைய தினமே ஒப்படைக்கப்பட்டது. மேலும் சில ஏஜெண்டுகள் யாத்ரீகர்களுக்கு சரியான உபசரிப்பு கொடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டும் உள்ளது.

எனவே ஊரில் இருந்து ஹஜ், உம்ரா செல்லும் யாத்ரீகர்கள் ஏஜெண்டுகளின் உண்மை தன்மையை உணர்ந்து அவர்கள் மூலம் பயணம் மேற்கொள்வது சிறந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...