கோவையில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை!

ஆகஸ்ட் 06, 2018 461

கோவை (06 ஆக 2018): கோவையில் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கோவையை சேர்ந்த விவசாயி முத்துசாமி, திருப்பூர் மாவட்டத்தில் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, பயிரிட்டுள்ளார். ஆனால், எதிர்பார்த்த விளைச்சல் அவருக்குக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், நிதி சார்ந்த சிக்கல் அவருக்கு அதிகரித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று முத்துசாமியின் மனைவி அருகிலிருந்து ஊரில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது முத்துசாமி அவர் தனது வீட்டை பூட்டிக் கொண்டு, தனது தாய், 6 வயது மகள் மற்றும் 4 வயது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

முத்துசாமியின் வீடு வெகு நேரம் மூடிக்கிடந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீஸுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை, நடத்திய முதற்கட்ட விசாரணையில் தான் முத்துசாமி நிதிச் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...