கருணாநிதி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

ஆகஸ்ட் 07, 2018 1112

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலையளிக்கும் விதத்தில் உள்ளதால் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததால் அவர் கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றமும் பின்னடைவும் மாறி மாறி இருக்கிறது.

நேற்று 10ஆம் நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு காலை முதல் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் கூறின. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் மாலை வேளையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் இன்று அடுத்த அறிக்கை வெளியிடப் படும் என எதிர் பார்க்கப் படுகிறது.

இதற்கிடையே கருணாநிதி குடும்பத்தினர் தொடர்ந்து மருத்துவ மனையில் உள்ளனர். மருத்துவ மனை வெளியில் தொண்டர்கள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளனர். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...