கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம்!

ஆகஸ்ட் 07, 2018 499

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கருணாநிதியின் உடல் படிப்படியாக செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான மருத்துவ உதவிகள் அளித்தும் உடலுறுப்புகள் செயலிழந்து வருகின்றன என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் கருணாநிதி உடல் நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும், வயது முதிர்வு மற்றும் கல்லீரல் பிரச்னை காரணமாக மருந்துகள் ஒத்துழைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இதுபற்றி தகவல் வெளியானதால், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், திமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மருத்துவமனையில் குவிந்தனர். ஏராளமான திமுக தொண்டர்களும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே ஸ்டாலின், மற்றும் அழகிரி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...