சூரியன் மறைந்தது - திமுக தலைவர் கருணாநிதி காலமானார்!

August 07, 2018

சென்னை (07 ஆக 2018): தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் காலமானார்.

கடந்த 10 தினங்களாக காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வநத தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்தது. எனினும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது.

இந்நிலையில் கருணாநிதி சிகிச்சை பலனின்றி மாலை 06:40 க்கு உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Search!