கருணாநிதி மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் இரங்கல்!

August 07, 2018

சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு ஆழந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கருணாநிதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் மிகப்பெரும் ஒரு தலைவரை இழந்திருக்கிறோம். மிகச் சிறந்த சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் குடியர்சுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!