கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த மோடி, ராகுல் வருகை !

August 07, 2018

சென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை சென்னை வரவுள்ளனர்.

உடல் நலக்குறைவால் கருணாநிதி இன்று மாலை 6:10 க்கு காலமானார். அவரது உடல் இரவு கோபாலபுரம் இல்லத்திற்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. கருணாநிதி உடல் நாளை காலை ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.

லட்சக்கணக்கான பொதுமக்களும், திமுக தொண்டர்களும், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் நாளை கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!