கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர மறுப்பு!

ஆகஸ்ட் 07, 2018 604

சென்னை (07 ஆக 2018): மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர அரசு மறுத்துவிட்டது.

இதுகுறித்து தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன், மெரினாவில் இடம் அளிக்க முடியாது என்றும் காந்தி மண்படம் , ராஜாஜி மண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடியை சந்தித்து மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் கேட்டது குறிப்பிடத்தக்கது. இதுவே கலைஞரின் விருப்பமாகவும் இருந்தது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...