தமிழகமெங்கும் போராட்டம் - மரங்கள் வெட்டிச் சாய்ப்பு!

ஆகஸ்ட் 07, 2018 598

கிருஷ்ணகிரி (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மெரினாவில் இடம் கேட்டு தமிழகம் எங்கும் போராட்டம் வெடித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் திங்கள் அன்று மாலை 06:10 க்கு காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர தமிழக அரசு மறுத்துவிட்டது.

இந்நிலையில் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் எங்கும் போராட்டம் வெடித்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே வேனப்பள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலையோர மரங்கள் வெட்டிச் சாய்க்கப் பட்டன. போராட்டக் காரர்கள் சாலைகளில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...