முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்!

ஆகஸ்ட் 08, 2018 524

சென்னை (08 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப் பட்டது.

மறைந்த கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு மறுத்துவிட்ட நிலையில், திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டு, நேற்று இரவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று காலையும் நடந்தது. விசாரணையின் முடிவில், மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடலடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன. இதனை அடுத்து இன்று மாலை ராஜாஜி ஹாலிலிருந்து கருணாநிதி உடல் லடசக் கணக்கன மக்கள் புடை சூழ் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதி அடக்கம் செய்யப் பட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...