அண்ணா தந்த அன்புப் பரிசுடன் அவரின் அருகே உறங்கும் கருணாநிதி!

August 08, 2018

சென்னை (08 ஆக 2018): அறிஞர் அண்ணா கொடுத்த அன்புப் பரிசான மோதிரத்துடன் அவர் அருகில் அடக்கம் செய்யப் பட்டுள்ளார் கருணாநிதி.

திமுக தலைவர் கருணாநிதி தன் உயிர்பிரியும் நேரத்திலும் கூட அண்ணா அளித்த அந்த பொருளை தம்மிடமே கெட்டியாக வைத்திருந்தார்.

அண்ணா உயிருடன் இருந்தபோது தி.மு.க. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில். கையில் பணம் இல்லாமல் தவித்தார் அறிஞர் அண்ணா. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சத்தை வசூலித்துத் தந்தார் கருணாநிதி. இதனை பாராட்டி, அண்ணா, கருணாநிதிக்கு ஒரு கணையாழி (மோதிரத்தை) அணிவித்தார். இந்த மோதிரத்தை கருணாநிதி பெரிதும் மதித்தார். தன் வாழ்நாளில் அந்த மோதிரத்தை மட்டும் அவர் கழட்டியதே இல்லை. இப்போது மண்ணறையிலும் அந்த அவரின் கையில் இருக்கிறது அந்த மோதிரம்.

Search!

ஓட்டு போட்டாச்சா?

சின்மயி, 14 வருடங்கள் கழித்து வைரமுத்துவை சாடுவது?
  • Votes: 0%
  • Votes: 0%
Total Votes:
First Vote:
Last Vote:

தற்போது வாசிக்கப்படுபவை!