கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க காங்கிரஸ் ஆதரவு!

ஆகஸ்ட் 11, 2018 575

புதுடெல்லி (11 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கடந்த 8ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், 80 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்த கருணாநிதியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்பி.க்கள் நேற்று வலியுறுத்தினர். அப்போது திருச்சி சிவா கருணாநிதியை புகழ்ந்து பேசி அவருடைய அரசியல் வாழ்வை விளக்கிப் பேசினார்.

இதனை காங்கிரஸ் கட்சி ஆமோதித்தது. மேலும் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு எம்பி.க்களும் ஆமோதித்து வரவேற்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...