டிவி பார்த்த மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன்!

August 11, 2018

கும்பகோணம் (11 ஆக 2018): கும்பகோணம் அருகே முழையூர் என்ற ஊரில் டிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவியை தீ வைத்துக் கொளுத்தியுள்ளார் கணவர்.

முழையூர் இந்திரா நகரை சேர்ந்தவர்கள் சிவானந்தம் - அருண்மொழி தம்பதி. சிவானந்தம் ஒரு கூலி தொழிலாளி. கல்யாணம் ஆகி 5 வருடங்களான இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அருண்மொழி டிவி பார்த்து கொண்டிருந்திருக்கிறார், கணவர் சாப்பாடு கேட்டும் அருண்மொழி அதனை சட்டை செய்யாமல் டிவியிலே மூழ்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாட்டிலில் கிடந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது வாயில் ஊற்றி கொண்டார். வாய் நிறைய மண்ணெண்ணையை வைத்து கொண்டு, பின்னர் ஒரு தீக்குச்சியை பற்ற வைத்து அருண்மொழி முகத்திலே பொளிச்சென்று கொப்பளித்தார்.

இப்போது அருண்மொழி முகம், தலை, கழுத்து, தோள்பட்டை என தீ பிடித்து அலறினார். வலியால் கதறினார். மனைவி துடிப்பதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிவானந்தம் பயந்துகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். உடனே சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இப்போது தீவிர சிகிச்சையில் அருண்மொழி இருக்கிறார். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!