தாத்தா கருணாநிதியின் தொகுதியில் பேரன் உதயநிதி?

ஆகஸ்ட் 11, 2018 668

சென்னை (11 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியில் அவரது பேரனும் ஸ்டாலின் மகனுமான உதயநிதி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருணாநிதி காலமானதை அடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளன. அழகிரி மீண்டும் திமுகவில் இணையவிருப்பதாகவும் கூறப் படுகிறது.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி ஏற்கனவே காலியாக இருக்கும் நிலையில் தற்போது கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இவ்விரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்களிலும் திருவாரூரில் உதயநிதியும், திருபரங்குன்றத்தில் அழகிரியும் களமிறங்கக் கூடும் என தகவல்கள் கசிந்துள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...