விநாயகர் ஊர்வலம் தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவு!

August 11, 2018

சென்னை (11 ஆக 2018): விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் தொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 13-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், சிலைகளை கரைப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி, சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர், தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு படையினரின் தடையில்லா சான்றுகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.

அத்துடன், காவல் துறை உதவி ஆணையர், கோட்டாட்சியர் அல்லது மாவட்ட துணை ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். மேலும், விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்திற்கு எங்கிருந்து மின் இணைப்பு பெறுவது மற்றும் அதற்கான உரிய ஆதாரம் குறித்து மின் வாரியத்திடம் கடிதம் பெறுவது அவசியம் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!