செவிவழி சிகிச்சை புகழ் ஹீலர் பாஸ்கருக்கு ஜாமீன்!

ஆகஸ்ட் 11, 2018 1137

கோவை (11 ஆக 2018): செவி வழி சிகிச்சை புகழ் ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுக பிரசவம் என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கவிருந்த ஹீலர் பாஸ்கர் போலீசாரால் கைது செய்யப் பட்டார். இவர் இயற்கை முறையில் உடல்நல பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி சிகிச்சையளித்து வந்தவர்

ஹீலர் பாஸ்கர் கைதுக்கு வரவேற்பு ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர், ஹீலர் பாஸ்கர் கைதுக்கு, எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஹீலர் பாஸ்கர் ஜாமீன் கோரி மனு அளித்தார். மனுவை விசாரித்த கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 30 நாட்கள் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...