தாகில் ரமானி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்!

August 12, 2018

சென்னை (12 ஆக 2018): சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தாகில் ரமானி பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த இந்திரா பானர்ஜி. சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும் பொறுப்பு தலைமை நீதிபதியுமான தாகில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதி தாகில் ரமணி கடந்த 2001 முதல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்தவர். சிவில், கிரிமினல் வழக்குகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவி வி.நளினி மற்றும் மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!