கருணாநிதி நினைவிடத்தில் மு.க.முத்து அஞ்சலி!

August 12, 2018

சென்னை (12 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அவரது மூத்த மகன் மு.க.முத்து அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 7.8.2018 அன்று உயிரிழந்தார்.

அவரது உடல் மெரினாவில் இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது மறைவு அன்று நேரில் அவரை சந்தித்து அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்களும், பொதுமக்களும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க முத்து இன்று கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

ஏற்கனவே கருணாநிதி மறைந்த அன்று கோபால புரம் இல்லத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். ஆனால் அவரது உடல் நிலை காரணமாக இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!