கேரள வெள்ள பாதிப்புக்கு மஜக சார்பில் நிவாரண உதவி!

August 12, 2018

சென்னை (12 ஆக 2018): கேரள வெள்ள பாதிப்புக்கு மஜக சார்பில் ரூ 10 லட்சம் மதிப்பிலான நிவாரணம் வழங்க மஜக முடிவு செய்துள்ளதாக தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

தென்காசியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் 5வது தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மாணம் நிறைவேற்றப் பட்டது.

கேரளாவில் மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதல் கட்டமாக மஜக சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கு நிவாரண உதவிகளை அனுப்பிவைப்பது என்றும், இதற்காக 17.08.2018 அன்று வெள்ளிக்கிழமை வழிபாட்டுதளங்கள் உட்பட அனைத்து இடத்திலும் துண்டேந்தி வசூல் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் கலைஞரின் மறைவுக்கு இரங்கல், ஹஜ் மானியம் 6கோடி ரூபாயை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தல், திருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம், தமிழ் உணர்வாளர்கள் சீமான், கௌதமன், வேல்முருகன், பாரதிராஜா, அமீர், மணியரசன் உள்ளிட்டோர் மீது காட்டப்படும் நெருக்கடிகளுக்கு கண்டனம். உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!