ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை!

ஆகஸ்ட் 13, 2018 791

சென்னை (13 ஆக 2018): சாலையில் கிடைத்த ரூ.74000 பணத்தை எடுத்த ஆட்டோ ஓட்டுநர் போலீஸ் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தார்.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த அருண் என்பவர் OLA நிறுவன ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10.08.2018-ஆம் நாள் மேட்லி சாலையிலிருந்து மேற்கு மாம்பலம் சென்று கொண்டிருந்தபோது¸ சாலையில் பிளாஸ்டிக் பை ஒன்றை கண்டார். அதில் ரூ 74000 இருந்தது .

அருண் பணம் அடங்கிய பையை மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் காவல்துறையினர், பணத்திற்கு உரியவரான மகேஷ்குமார் என்பவரை அடையாளம் கண்டறிந்து ரூ.74,000 பணம் அடங்கிய பையை ஒப்படைத்தனர்.

இதனையடுத்து நேர்மையாக பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் அருணை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விஸ்வநாதன்¸ இ.கா.ப. அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...