எம்ஜிஆருக்கு அருகில் கலைஞர் இருக்க வேண்டும் - ரஜினி!

ஆகஸ்ட் 13, 2018 555

சென்னை (13 ஆக 2018): அதிமுக ஆண்டு விழாவில் எம்ஜிஆர் படத்திற்கு அருகில் கலைஞர் படமும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவுக்கு திரைத்துறை சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை நினைத்துப் பார்க்கமுடியவில்லை. அவரால் அரசியல் தலைவர்கள் ஆனவர்கள் பல லட்சம் பேர். எம்ஜிஆரையும் சிவாஜி கணேசனையும் ஒரே படத்தில் ஸ்டாராக மாற்றியவர் கலைஞரின் வசனம். கடந்த 50 ஆண்டுகளில் பல சூழ்ச்சிகளையும் வஞ்சனைகளையும் கடந்து கட்சியை காப்பாற்றியவர் அவர்.

கலைஞரின் மறைவுக்கு வந்த கூட்டத்தை பார்த்து பிரமித்து போனேன். அவருக்கு மெரினாவில் இடம் தராமல் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆண்டு விழாவில் எம்ஜிஆர் படத்திற்கு அருகில் கலைஞர் படமும் வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாவதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. என் பிறந்த நாள் நல்ல நாள் வந்தால் இனி யாரை சந்திப்பது என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இனி பெரிய விழா என்றால் தளபதி யாரை கூப்பிட போகிறார் என்று தெரியவில்லை. கவர்னர்லிருந்து மற்ற மாநில முதல்வர்கள், தலைவர்கள் மெரினாவில் இருக்கும் பொழுது.. தமிழ்நாட்டின் முதல்வர் அங்கு இல்லாதது சரியா..???. இவ்வாறு ரஜினி பேசினார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...