திமுக இரண்டாக உடையும் - பீதியை கிளப்பும் அழகிரி!

ஆகஸ்ட் 13, 2018 551

சென்னை (13 ஆக 2018): கருணாநிதி மறைந்து 1 வாரம் கூட ஆகாத நிலையில் மு.க.அழகிரியால் திமுகவில் புயல் அடிக்க தொடங்கியுள்ளது.

இன்று காலை அழகிரி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதன்பிறகு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்றால் கட்சி சின்னாபின்னமாகிவிடும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...