கோவையில் பெண்ணே தன் பிஞ்சுக் குழந்தைக்கு செய்த கொடூரம்!

August 14, 2018

கோவை (14 ஆக 2018): கோவையில் பெண் ஒருவருக்கு இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அதன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இரண்டாவதாக ஆண் குழந்தை பிறக்கும் என வனிதா நினைத்திருந்த நிலையில், பெண் குழந்தை பிறந்தது, வனிதாவை ஆத்திரமடையச் செய்தது. கோபத்தில் இருந்த வனிதா, பிஞ்சுக் குழந்தை என்றும் பாராமல் அதனை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

பின் ஒன்றும் தெரியாததுபோல் காவல்துறையினரிடன் சென்று குழந்தையை காணவில்லை என நாடகமாடியுள்ளார். ஆனால வனிதா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதனை அடுத்து வனிதாவை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!