தஞ்சை மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கொலை!

ஆகஸ்ட் 14, 2018 573

தஞ்சாவூர் (14 ஆக 2018): தஞ்சை மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அவரது நண்பர் ஒருவரால் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பியர் (50). இவர் தனது நண்பர் திருமுருகன் அழைத்ததன் பேரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று தஞ்சை மாவட்டம் ஆவிக்கோட்டைக்கு வந்துள்ளார். இருவரும் அருகில் உள்ள ஊர்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமுருகன் தாக்கியதில் பியர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதாகத் தெரிகிறது.

மேலும், கொலையை மறைக்க உடலை பெட்ரோல் ஊற்றி திருமுருகன் எரித்துள்ளார். பாதி எரிந்த நிலையில், சடலத்தை வெட்டி மூட்டை கட்டி உள்ளிக்கோட்டை கால்வாயில் வீசியுள்ளார். உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சடலத்தைக் கண்டெடுத்த போலிசார் திருமுருகனைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...