திருமணம் ஆன பெண்களை வலையில் வீழ்த்தி விடுவேன் - கால் டாக்சி டிரைவர் பரபர வாக்குமூலம்!

ஆகஸ்ட் 16, 2018 1511

சென்னை (16 ஆக 2018): சென்னையில் திருமணம் ஆன பெண்களை மயக்கி அவர்களை வன்புணர்வு செய்து அவர்களிடம் உள்ள நகைகளையும் கொள்ளை அடித்துள்ளான் ஒரு கால் டாக்சி டிரைவர்.

சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற கால் டாக்ஸி டிரைவர், அடையாறு, திருவான்மியூர், ஈசிஆர் பகுதிகளில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறான். ரோட்டில் தனியாக செல்லும் பெண்களிடம் யோக்கியன் மாதிரி நைசாக பேசி அவர்களை அவன் வலைக்குள் சிக்க வைப்பான், பின் என் முதலாளி சுமங்கலி பூஜை நடத்துறார். அந்த பூஜையில் பட்டுப்புடவை தர்றார். அவர் வீடு பக்கத்துலதான் இருக்கு என்று ஆசை வார்த்தை கூறுவான்.

இதனை நம்பிய பல பெண்களை காரில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைத்து அவர்களை கற்பழித்துவிட்டு, அவர்களிடமிருந்து பணம் நகைகளை பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளான்.

இதுகுறித்து பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் களத்தில் இறங்கிய போலீஸார் காமுகன் சுரேஷை கைது செய்தனர்.

அவனை பிடித்து விசாரித்ததில், எனக்கு கல்யாணம் ஆன பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர்கள் மேல ஒரு கண்ணு. அப்படிப்பட்டவர்கள் ரோட்டில் தனியாக போனால், நைசா பேசி அவர்களை என் வலைக்குள் சிக்க வைப்பேன் என கூறியுள்ளான்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...