தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை!

ஆகஸ்ட் 16, 2018 1711

சென்னை (16 ஆக 2018): முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை ஒட்டி நாளை தமிழகத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் சிகிச்சை பலனின்றி அவரது 94 வது வயதில் காலமானார்.

இந்நிலையில் வாஜ்பாய் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...