அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி கேரள மக்களுக்கு உதவி!

ஆகஸ்ட் 17, 2018 554

திருவனந்தபுரம் (17 ஆக 2018): அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி கேரள வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 16 டன் அரிசி மற்றும் இதர அத்தியாவசிய உணவுப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில் கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பிலும் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கோவை கவுண்டன் பாளையம் எம்.எல்.ஏ ஆறுகுட்டி 16 டன் அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...