கேரளாவை தாக்கிய வெள்ளம் தமிழகத்தையும் தாக்கியது!

ஆகஸ்ட் 18, 2018 594

கடலூர் (18 ஆக 2018): கேரளாவை தாக்கிய மழை வெள்ளம் தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களையும் தாக்கியுள்ளது.

தென் மேற்கு பருவ மழையால் அணைகள் நிறம்புவதால் கர்நாடகாவில் 2 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் 20 அடி உயரத்துக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.70 லட்சம் கன அடியாக உள்ளது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. 700க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அங்கு துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. வெள்ளம் தொடர்பான அவசர உதவிக்கு 04365 243024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...