கேரள மக்களுக்கு உதவுபவர்கள் கவனத்திற்கு - முழு விவரம்!

ஆகஸ்ட் 18, 2018 824

சென்னை (18 ஆக 2018): கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்க் கண்ட முகவரிகளை தொடர்பு கொண்டால் இலகுவாக உதவலாம்.

கேரள மாநிலத்தில் கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கேரள மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு சென்றடைய உள்ளன. வரும் திங்கட்கிழைமை இரவு வரை, சென்னை, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களில் நிவாரணப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

தேவைப்படும் பொருட்கள்:
சானிடரி நாப்கின்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, துண்டு, பக்கெட்டுகள், சோப்புகள், டூத் பேஸ்ட், டூத் ப்ரஷ், உள்ளாடைகள், துணிகள், மருந்துகள் ,முதலுதவி மருந்துகள், போர்வைகள், குழந்தைகளுக்கான நாப்கின்கள், பால் பவுடர், பள்ளி மாணவர்களுக்கான பென்சில், பேனா, நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக், எண்ணெய், தரை விரிப்புகள் ஆகியவை தேவைப்படுகின்றன

நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவி செய்ய நினைக்கும் மக்கள், கீழ் குறிப்பிட்டுள்ள வெரிஃபை செய்யப்பட்ட இடங்களுக்கு சென்று உங்களால் இயன்றதை அளிக்கவும். வரும் திங்கட்கிழைமை இரவு 11 மணி வரை இந்த உதவி மையங்களில் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படும்.

சென்னை - உதவி மையங்கள்

1. தி நியூ வேஸ் ஆப் சொஸைட்டி ஒருங்கிணைக்கும் உதவி மையங்கள்

குரோம்பேட் - பிபிஆர் நகர் - எண் - 9629684981
குரோம்பேட் - சென்பகா ஏஜென்சீஸ் - எண்: 9962008510
எழும்பூர் - அறப்போர் இயக்கம் - எண் - 9176141666
பெரம்பூர் - லீஸர் பேக்டரி - எண் - 9176452325

2. டூ ஃபார் அதர்ஸ் அமைப்பு ஒருங்கிணைக்கும் உதவி மையங்கள்

தி- நகர் - நேச்சுரல்ஸ் லான்ஞ் - எண் - 9789708245
நுங்கம்பாக்கம் பைக்ராப்ட்ஸ் ரோடு கார்டன் - எண் - 9841174999
அயனாவரம் - எண் - 9499909312

3. சமூக பணியாளர் சரிதா ஒருங்கிணைக்கும் உதவு மையங்கள்

அடையார் க்ரிம்சன் சக்ரா - எண் - 9884320744

சேத்துப்பட்டு - எண் 9962008926
கீழ்பாக்கம் ஈகா திரையரங்கம் அருகில் - எண் 9677048048
கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் - எண் - 9551555550
சாலிகிராமம் வல்லியம்மாள் தெரு- எண் - 9789165700

4. கோவை - உதவி மையங்கள்

C4TN அமைப்பு ஒருங்கிணைக்கும் உதவி மையங்கள்
சாய்பாபா காலனி - 9629300200
சுந்தராபுரம் - 8015714790
லட்சுமி மில்ஸ் - 9894623413
ஆர்.எஸ் புரம் - 958555005

5. மதுரை - உதவி மையங்கள்

சரவணா டிரேடர்ஸ் அரிசி ஆலை - எண் - 9344124792
திருமங்கலம் - 9994723740

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...