சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

ஆகஸ்ட் 18, 2018 574

சென்னை (18 ஆக 2018): சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பெட்டிகளைத் தள்ளிச்செல்லும் தள்ளுந்து (Trolley) பற்றாக்குறையால் இன்று (18 ஆகஸ்ட் 2018) காலை பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர்.

இதனால் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சர்வதேச தரத்தில் விமான நிலைய சேவைகள் அமைய பயணிகள் வலியுறுத்தினர்.

நிலைய அதிகாரிகள் கூறும்போது, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் வருகையின் போது மட்டும் தற்காலிகமாக ஏற்படும் இச்சிக்கல் விரைவில் நிரந்தர தீர்வைப் பெறும் என்றனர்.

சில நேரத்துக்குப் பின், தள்ளுந்துகள் பயணிகளுக்குக் கிடைக்க வழி செய்யப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...