சென்னை விமான நிலையத்தில் பரிதவித்த பயணிகள் - வீடியோ!

August 18, 2018

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பெட்டிகளைத் தள்ளிச்செல்லும் தள்ளுந்து (Trolley) பற்றாக்குறையால் இன்று (18 ஆகஸ்ட் 2018) காலை பயணிகள் கடும் அவதிக்கு ஆளாயினர்.

இதனால் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சர்வதேச தரத்தில் விமான நிலைய சேவைகள் அமைய பயணிகள் வலியுறுத்தினர். ஒன்றுக்கு மேற்பட்ட விமானங்கள் ஒரே நேரத்தில் வருவதால் இதுபோன்று பிரச்சனைகள் ஏற்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடியோ

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!