பெருக்கெடுத்த வெள்ளம் - இரவோடு இரவாக உடைந்த கொள்ளிடம் பாலம் - வீடியோ

ஆகஸ்ட் 19, 2018 576

திருச்சி (19 ஆக 2018): காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவு தண்ணீர் வெளியாகும் நிலையில், திருச்சி கொள்ளிடம் அணைக்கு அருகில் உள்ள இரும்பு பாலம் மொத்தமாக உடைந்துள்ளது. இதனால் அருகில் உள்ள மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப் படுவதால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது. இந்த நிலையில்தான் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு முன் விரிசல் ஏற்பட்டது. 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக இந்த பாலம் உடைந்தது. காவிரியில் அதிக நீர் வரும் நிலையில் பாலம் உடைந்தது.

வீடியோ

தற்போது அங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மாற்று போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...