நாடெங்கும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்!

ஆகஸ்ட் 22, 2018 421

சென்னை (22 ஆக 2018): நாடெங்கும் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

இறைத்தூதர் இபுறாஹீம் நபியின் தியாகமும் இறை அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும். அதன்படி மக்காவில் உலக முஸ்லிம்கள் ஹஜ் என்ற கடமையை நிறைவேற்றியும் வருகின்றனர்.

அவ்வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இன்று பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப் படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

குறிப்பாக இப்ராஹீம் நபியின் மகன் இஸ்மாயில் நபியை அறுத்துப் பலியிட இறைவன் கனவின் மூலம் ஆணையிட்டான் என்பதற்காக மகனையும் அறுத்துப் பலியிட துணிந்தார் இப்ராகீம் நபி ஆனால் இறைவன் இப்ராஹீம் நபியின் துணிவை சோதிக்கவே இந்த ஆணையை பிறப்பித்தான் என்பது உண்மை. பின்பு மகனுக்கு பதிலாக ஆட்டை அனுப்பி பலியிட செய்தான் இறைவன். அதன் நினைவாக ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை குர்பானி கொடுக்கும் இஸ்லாமியர்கள், அவற்றின் இறைச்சியை ஏழைகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.

பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...