மய்யத்தை குழியில் தள்ளும் கமல் ஹாசன்!

ஆகஸ்ட் 23, 2018 819

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் கமல் ஹாசனின் ஒருதலைப் பட்ச நடவடிக்கைகளால் கமலின் மய்யம் கட்சி மேலும் வலுவிழந்து காணப்படுவதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

கமல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று ஆரம்ப காலங்களில் தெரிவித்து வந்தாலும், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதற்கு முன்பு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை தொகுத்து வழங்கி கட்சியின் அறிமுகத்திற்கும், வளர்ச்சிக்கும் களமாக பயன்படுத்திக் கொண்டார். பலர் அதனை ஆதரிக்கவும் எதிர்க்கவும் செய்தனர். எனினும் கமலின் அரசியல் நையாண்டிகள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில்தான் தனக்கு இருந்த வரவேற்பை பயன்படுத்தி பிக்பாஸ் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் இந்த சீசனில் அளவுக்கு அதிகமான அசிங்கங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக மஹத் யாஷிகா, ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களின் நடவடிக்கைகளால் தமிழக மக்கள் பெருமளவில் அதிருப்தி கொண்டுள்ளனர். விஜய் டிவிக்கு இதெல்லாம் பெரிய விசயமல்ல. ஆனால் அரசியல் கட்சி தொடங்கி முதல்வராகும் கனவில் ஒவ்வொரு படியையும் எட்டி வைக்கும் கமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்து கொள்ளும் விதம் பலரை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

குறிப்பாக பெண்ணுரிமை பேசும் கமல் போட்டியாளர்களில் ஒருவரான மும்தாஜுக்கு மகத் செய்யும் கொடுமைகளை சென்ற வாரமே தட்டிக் கேட்பார் என பொதுமக்கள் எதிர் பார்த்தனர். ஆனால் அவர் கண் முன்னே அவ்வளவு அவமானங்கள் நடந்தும் அதனை கண்டும் காணாதது போல் திசை மாறி சென்றதோடு, மகத், ஐஸ்வர்யாவுக்கு ஆதரவு கரம் நீட்டியதாகவே பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதில் மும்தாஜுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் மறுக்கப் பட்டதை பட்டவர்த்தனமாக உணர முடிந்தது.

குறிப்பாக மும்தாஜ் செய்யும் மத அடையாளங்கள் மற்றும் திருக்குர்ஆன் வசனங்களை மந்திரம் என்று கிண்டலாக பேசிய மகத், ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களை கமல் தட்டிக் கேட்டிருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆதங்கம். சரியான நேரத்தில் அதனை தட்டிக் கேட்காமல் விட்ட கமல் மய்யத்தை எப்படி கட்டிக் காப்பார் என்ற கேள்வி எழுகின்றது. இதனால் மய்யம் கட்சிக்கு ஆதரவாக செயல் பட்ட பலர் கட்சியை விட்டு விலகும் எண்ணத்தில் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...