டி ஆர்.பாலு - பாஜக ரகசிய தொடர்பு!

ஆகஸ்ட் 24, 2018 812

புதுடெல்லி (24 ஆக 2018): முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய தொடர்பு தொடர்ந்து இருப்பதாக அறியப் படுகிறது.

வரும் 30 ஆம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற திமுக நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந் நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு அமித்ஷாவுக்கு டி.ஆர். பாலு அழைப்பு விடுத்துள்ளார். இதனை அமித்ஷாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே டி.ஆர் பாலுவுக்கும் பாஜகவுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக உள்ள நிலையில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கடந்த திமுக மாநாடு ஒன்றில் தமிழன் பிரசன்னா பாஜகவையும் மோடியையும் விமர்சித்துப் பேசியபோது அந்த பேச்சை பாதியிலேயே டி.ஆர்.பாலு நிறுத்த சொன்ன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழன் பிரசன்னா ஈரோடு பேச்சு வீடியோவில் பிரசன்னா பேச்சை டி.ஆர்.பாலு நிறுத்த சொன்னதை 10:58 வது நிமிடத்தில் கவனிக்கவும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...