பழைய பாணிக்குத் திரும்பும் தேமுதிக!

ஆகஸ்ட் 25, 2018 592

சென்னை (25 ஆக 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தேமுதிக பழைய பாணிக்கு திரும்புகிறது.

இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் லஞ்சம், ஊழல், வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேமுதிக பயணித்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளை தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே குறிக்கோளாக இருப்பதாகவும், மக்கள் பிரச்சனைகளில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்களுக்கு உதவிகள் செய்திட அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் எனவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

தேமுதிக கட்சி தொடங்கியபோது தனித்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற போதும், கட்சி மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. அதனை மீண்டும் திரும்ப கொண்டு வரும் முயற்சியாக இருக்கலாம் என இந்த முடிவு கருதப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...