ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா?

August 26, 2018

சென்னை (26 ஆக 2018): துணை முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்யப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை, சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம், ‘அடுத்தடுத்து தமிழகத்தில் இடைத் தேர்தல் வர உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு நான் வகித்து வரும் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சிப் பணியில் ஈடுபடத் தயார்’ என்று பேசியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி ஓ.பி.எஸ், ‘நான் ராஜினாமா செய்வதாக வரும் செய்திகள் கற்பனையானவை. அதை நம்ப வேண்டாம்’ என்றுள்ளார். மேலும் அவர், ‘திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் வரவுள்ள இடைத் தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெறும்’ என்றார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!