கனிமொழி ஆ.ராசா திமுகவில் புறக்கணிப்பு?

ஆகஸ்ட் 26, 2018 1363

சென்னை (26 ஆக 2018): திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் கனிமொழி மற்றும் ஆ.ராசா ஸ்டாலினால் புறக்கணிக்கப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து திமுக தலைவர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதில் ஸ்டாலினை திமுக தலைவராக தேர்வு செய்யலாம் என முடிவு செய்யப்பட்டு வரும் 28-ஆம் தேதி பொதுக் குழு கூடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக செயல்தலைவராக உள்ள ஸ்டாலின் தலைவர் பதவிக்கும் திமுக முதன்மை செயலாளராக உள்ள துரைமுருகன் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். இருவரும் தங்கள் வேட்புமனுக்களை எடுத்துக் கொண்டு கருணாநிதியின் சமாதிக்கு சென்று ஆசி பெற்றனர். இதையடுத்து கோபாலபுரத்துக்கு சென்ற இருவரையும் தயாநிதி மாறன், தமிழரசு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

கருணாநிதி சமாதியிலும் கோபாலபுரத்திலும் ஆசி வாங்க சென்ற நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு அழைப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கும் அழைப்பில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வருத்தம் அடைந்த இருவரும், அண்ணா அறிவாலயத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இருவரும் ஸ்டாலினால் புறக்கணிக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...