கனிமொழியின் அன்பு முத்தத்தால் நெகிழ்ந்த ஸ்டாலின்!

ஆகஸ்ட் 26, 2018 932

சென்னை (26 ஆக 2018): கனிமொழியின் அன்பு முத்தத்தால் அண்ணன் ஸ்டாலின் நெகிழ்ந்து போனார்.

கருணாநிதிக்கு பிறகு திமுகவின் 2-ஆவது தலைவராக ஸ்டாலின் பதவியேற்கவுள்ளார். அதற்கான தேர்தல் வரும் 28-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சி இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. வேட்புமனுவை தாக்கல் செய்ய ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் அண்ணா அறிவாலயத்துக்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்திருந்த கனிமொழி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவரை அவருக்கு முத்தத்தை பரிசாக வழங்கினார்.

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய தயாரான ஸ்டாலின் கருணாநிதி சமாதிக்கு சென்றார். இதுகுறித்து கனிமொழிக்கு தகவல் தெரிவிக்கப் படவில்லை என்ற தகவல் வெளியானது. இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் கனிமொழி ஸ்டாலினுக்கு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...