திருநாவுக்கரசருக்கு பாஜக மீதுதான் பாசம் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஆகஸ்ட் 27, 2018 503

திருச்சி (27 ஆக 2018): பாஜக மீது இன்றும் பாசம் வைத்துள்ள திருநாவுக்கரசர் பாஜகவுக்கே செல்லலாம் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சமயபுரத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2,3 நாட்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் வார பத்திரிக்கை ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இன்னும் இருக்கிற திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சியை பற்றியும், வாஜ்பாய் பற்றியும் சிறப்பாக பேசியிருந்தார். வாஜ்பாய் எவ்வளவு உயர்ந்த மனிதர், பி.ஜே.பி எவ்வளவு உயர்ந்த கட்சி என்று மிக சிறப்பாக பேசியிருந்தார். அதை படித்த பின்னர் தான் எனக்கே வாஜ்பாய் பற்றி அதிகம் தெரியவந்தது. இவ்வளவு நல்லவரான வாஜ்பாயை விட்டு திருநாவுக்கரசர் வெளியே வந்தது தவறு. மீண்டும் அவர் வாஜ்பாய் இருந்த பா.ஜ.க. கட்சிக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நல்ல கட்சியை விட்டு ஏன் வந்தார் என்பது தெரியவில்லை. இன்னும் கூட காலதாமதம் ஆக வில்லை. மீண்டும் அவர் அக்கட்சிக்கு சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது." என்றார்.

மேலும், தமிழகத்தில் பாலங்கள் உடைவது குறித்து சந்தேகம் எழுப்பிய அவர். புதிய பாலம் கட்டி கமி‌ஷன் பார்ப்பதற்காக ஆளும் கட்சி அமைச்சர்களே இதனை செய்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. இப்போது தான் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை ஆரம்பித்து உள்ளது. என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...