ஸ்டாலினுக்கு தமிழிசை வைத்த ஐஸ்!

ஆகஸ்ட் 27, 2018 1284

திருநெல்வேலி (27 ஆக 2018): ஸ்டாலின் கருணாநிதியின் மகன் என்பதால் மட்டும் திமுக தலைவராகவில்லை அடிமட்ட தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைத்து முன்னேறியுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப் படவுள்ள நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் திமுக தலைவர் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், கருணாநிதியின் வாரிசு என்பதால் மட்டுமே ஸ்டாலின் பதவிக்குவரவில்லை, அடிப்படை தொண்டனாக இருந்து பதவிக்கு வந்தவர். கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக பிரதிநிதி கண்டிப்பாக பங்கேற்பார். நடக்க முடியாததையும் நடத்திக் காண்பிப்பவர் தான் திமுக தலைவர் கருணாநிதி. என்றார்.

முன்னதாக கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்ளவிருப்பதாக கூறப் பட்டது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழிசை இவ்வாறு பேசியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...