கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக இருக்கு ஆனால் இல்லை!

ஆகஸ்ட் 27, 2018 649

புதுடெல்லி (27 ஆக 2018): மறைந்த தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா பங்கேற்கவில்லை.

கருணாநிதி நினைவேந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசிய செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் கட்சி சார்பாக பங்கேற்பார்கள் என்று அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 30-ம் தேதி நடக்க இருக்கும் இந்த நிகழ்வில், முன்னாள் பிரதமர் ஹெச்.டி. தேவ கவுடா, காங்கிரஸின் குலாம் நபி ஆசாத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...