கருணாநிதி மறைவால் அதிர்ச்சி அடைந்து உயிரிழந்த 248 பேருக்கு நிதியுதவி!

ஆகஸ்ட் 28, 2018 595

சென்னை (28 ஆக 2018): கருணாநிதி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சோம்நத் சட்டர்ஜி மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

மேலும் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...