பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வு!

ஆகஸ்ட் 28, 2018 485

சென்னை (28 ஆக 2018): பெட்ரோல் விலை நேற்றை விட மேலும் 15 காசுகள் உயர்ந்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து 81.09 ஆக விற்பனை செய்யபடுகிறது. டீசல் விலை 16 காசுகள் உயர்ந்து 73.54 ஆக விற்பனையாகிறது. டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான விலை உயர்வை சந்தித்து இருப்பது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 81.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 73.54 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை 16 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யபடுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...