ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்ற ஸ்டாலின்!

August 28, 2018

சென்னை (28 ஆக 2018): திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மு.க. ஸ்டாலின் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

இன்று காலை நடந்த பொதுக்குழு கூட்டதில் ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் அக்கட்சி பொருளாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதை திமுகவினர் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டாலின் காலை மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் கோபாலபுரம் சென்று தனது சகோதரி செல்வியிடம் வாழ்த்து பெற்று, அங்குள்ள கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு, சிஐடி காலணி சென்று, ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றரார். சமீபகாலமாக கனிமொழியும் ஸ்டாலினுடன் அதிக நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!