சென்னையில் தாயத்து ஓதி மந்திரிக்கும் செய்யது பஸ்ருதீன் என்பவர் படுகொலை!

ஆகஸ்ட் 28, 2018 862

சென்னை (28 ஆக 2018): சென்னை திருவல்லிக்கேணியி தாயத்து ஓதி மந்திரித்து வந்த சையத் பஸ்ருதின் (62) என்பவர் மர்ம நபரால் எரிதிரவம் ஊற்றி படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பென்சினஸ் முதல் தெருவில் வசித்து வந்தவர் சையத் பஸ்ருதின் (எ) பாபு பாய் (62). இவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் மந்திரம் ஓதும் மோதினாராக தொழில் செய்து வந்தார்.

தங்களது பிரச்சினைகளுக்காக வரும் அனைத்து மதத்தினருக்கும் பாத்தியா ஓதி தாயத்து தருவது, மந்திரிப்பது, அவர்களுக்கு பலன் சொல்வது உள்ளிட்ட வேலைகள் செய்து வந்தார். இதற்காக சிறு தொகை வாங்குவது அவரது வழக்கம்.

இந்நிலையில் நேற்றிரவு சையத் பஸ்ரூதின் திருவல்லிக்கேணியில் உள்ள தனது இடத்தில் இருந்தபோது அவரைப்பார்க்க பர்தா அணிந்த மர்ம நபர் வந்தார். அவர் அவரிடம் பேசியபடி திடீரென தான் கொண்டு வந்த எரி திரவம் ஒன்றை அவரது தலையில் ஊற்றி தீ வைத்தார். சையத் பஸ்ருத்தீன் சுதாரிப்பதற்குள் அவரது தலை, முகம் முழுதும் தீப்பற்றிக்கொண்டது.

அவர் கீழே உருண்டு புரண்டார், இந்த நேரத்தில் பர்தா அணிந்து வந்த அந்த நபர் ஓடிவிட்டார். பஸ்ருத்தீனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சையத் பஸ்ருதீன் உயிரிழந்தார்.

சையத் பஸ்ருத்தீன் எரிக்கப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தினர். தீ வைத்து எரித்து விட்டு தப்பிய நபர் யார் என்பது குறித்தும், அது ஆணா, பெண்ணா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விவகாரம் அப்பகுதியி பரபரப்பை ஏற்படுத்தீயுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...