ஹஜ் அழைத்துச் செல்வதாக கூறி ரூ. 2 கோடி மோசடி செய்தவர் கைது!

ஆகஸ்ட் 29, 2018 690

நாகர்கோவில் (29 ஆக 2018): கன்னியா குமரி மாவட்டத்தில் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மேட்டுக்கடையைச் சேர்ந்தவர் சிராஜுதீன். இவர் சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவர், புனித ஹஜ் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 2 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளார்.

இவரால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 74 பேர் 2.33 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தக்கலை காவல் நிலையத்தில் இவர் மீது புகாரளித்தனர். அதையடுத்து போலீசார் சிராஜுதீனை கைது செய்து விசாரித்தனர். அதில் மோசடி நடந்தது குறித்த தகவல்கள் வெளியாகின.

இவர், கடந்த ஏப்ரல் மாதத்தில், ஏர்வாடியில் 40 பேரிடம் மோசடி செய்தவர். தொடர் மோசடியில் ஈடுபட்டும் இவர் போலீசாரிடம் சிக்காமல் தப்பி கொண்டே இருந்தார். இந்நிலையில் தற்போது ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விரைவில், ஏமாற்றப்பட்டவர்களுக்கு உரிய தொகையை திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...